உங்களை கோடீஸ்வரர்
ஆக்கும் 10 விஷயங்கள்!
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com
யாருக்குதான் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற
எண்ணம் இருக்காது. அதனை நிறைவேற்ற கீழ்க்கண்ட பத்து விஷயங்களை கடைபிடித்தால் போதும்.
முதலீடு செய்தால்
மட்டுமே
1. ஒரு
விதையைப் பெட்டிக்குள்
அடைத்து வைத்தால்,
எத்தனை ஆண்டுகளானாலும்
அது விதையாகவே
இருக்கும்.
அதையே
மண்ணில் விதைக்கும்போதுதான்
அது செடியாக,
மரமாக வளர்ந்து
பயனளிக்கும்.அதுபோலத்தான்
நம்முடைய பணமும்
முதலீடு செய்தால்
மட்டுமே வளர்ச்சியடையும்.
முதலீடு விலைவாசியைத்
தாண்டி வளர்கிறதா?
2. முதலீடு செய்தால் மட்டும்
போதாது; முதலீடு
என்பது விலைவாசியைத்
தாண்டி வளர்கிறதா
என்பதை உறுதிசெய்ய
வேண்டும்.
அப்போதுதான் நாம்
வளர்ச்சிப் பாதையில்
செல்கிறோம் என
அர்த்தமாகும்.
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com |
கூட்டு வட்டியின்
மகிமை
3. உலகின்
எட்டாவது அதிசயமான
கூட்டு வட்டியின்
மகிமையை உணர
வேண்டும். அதற்கு
நாம் நீண்ட
காலம் முதலீடு
செய்ய வேண்டும்.
இதற்கான எளிய
ஃபார்முலா இதோ...
முதலீட்டு மீதான
வருமானம் > பணவீக்கம்
= செல்வம் பெருக்கம்
முதலீட்டு மீதான
வருமானம் < பணவீக்கம்
= செல்வம் இழப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களில்
முதலீடு
4. எந்தவொரு பொருளை உற்பத்தி
செய்வதற்கும் மூலப்பொருள்
அவசியமாகிறது. அதுபோல,
எந்தவொரு கார்ப்பரேட்
நிறுவனமும் வளர்ச்சியடைய
வாடிக்கையாளர் எனப்படும்
(consumer) ஆதாரம் அவசியமாகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
நம்மைப் பயன்படுத்தி
(130 கோடி மக்கள்)
வளரும்போது, நாம்
ஏன் கார்ப்பரேட்
நிறுவனங்களில் முதலீடு
செய்து வளரக்கூடாது
என்பதை உணர
வேண்டும்.
சிறு
தொகை முதலீடு
5. வாடிக்கையாளராக மட்டுமே
இருந்து வேடிக்கைப்
பார்ப்பதை விடுத்து,
நிறுவனங்களின் பங்குகளில்
முதலீடு செய்வதன்
மூலம் பங்கு
தாரராக மாற
வேண்டும்.
ஒரு
சிறு தொகையை
முதலீடு செய்வதன்
மூலம் மறைமுகமாக
நாமும் பல
பெரிய நிறுவனங்களில்
மைக்ரோ முதலாளி
யாக மாறுகிறோம்.
நம் முதலீடும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு
சேர்ந்து வளரும்.
தூங்கும் நேரங்களில்
கூட வருமானம்
6. நாம் செய்யும் சிறிய
முதலீடு என்பதுகூட
நாம் தூங்கும்
நேரங்களில் நமக்காக
வேலை செய்துகொண்டிருக்கும்.
உதாரணமாக டிசிஎஸ்,
இன்ஃபோசிஸ் போன்ற
நிறுவனங்கள் இந்தியாவில்
மட்டுமன்றி, மற்ற
மேலை நாடுகளிலும்
வெற்றிகரமாக இயங்கி
வருகின்றன.
இங்கு நாம்
முதலீடு செய்துவிட்டுத்
தூங்கிக் கொண்டிருப்போம்.
ஆனால், அதேநேரத்தில்
அமெரிக்காவில் நாம்
முதலீடு செய்த
கம்பெனியில், ஆயிரக்கணக்கானோர்
வேலை செய்து
கொண்டிருப்பார்கள். அதனால்
கம்பெனி வளரும்போது
நம் முதலீடும்
வளரும்.
மியூச்சுவல் ஃபண்ட்
7. பங்குச் சந்தை சார்ந்த
மியூச்சுவல் ஃபண்டுகளில்
நாம் முதலீடு
செய்யும் ரூ.5,000
என்பது 30 முதல்
40 கம்பெனி பங்குகளில்
பிரித்து முதலீடு
செய்யப்படுகிறது.
ஐ.டி,
ஃபார்மா, இன்ஃப்ரா,
வங்கி எனப்
பல்வேறு துறைகளில்
பகிர்ந்து முதலீடு
செய்யும்போது பெருமளவு
ரிஸ்க் தவிர்க்கப்படுகிறது.
எஸ்.ஐ.பி
-SIP
8. மாதத் தவணை முறையில்
(எஸ்.ஐ.பி -SIP) முதலீடு
செய்யும்போது, சராசரியாக
(Rupee Cost Average) அதிகபடியான யூனிட்கள்
கிடைக்கும். எனவே,
இது ஒரு
பாசிட்டிவான விஷயமே.
9. ரிஸ்க் என்பது, தன்னுடைய
தேவை, எப்போது
பணம் தேவை
என்பதை அறியாமல்
செய்யப்படும் முதலீடாகும்.
ஹைபிரிட்
ஃபண்ட்
10. பணத் தேவை ஓராண்டிலா
அல்லது ஐந்தாண்டுகளுக்குப்பிறகா என்பதைக்
கணித்து அதற்கேற்றவாறு,
குறுகிய காலத்
தேவையாக இருந்தால்
கடன் பத்திரத்திலும்,
மூன்று முதல்
ஐந்து ஆண்டுகளுக்குள்
தேவையிருந்தால். ஹைபிரிட்
ஃபண்டுகளிலும், ஐந்து
முதல் 10 ஆண்டுகளுக்கு
மேல் தேவையெனில்
ஈக்விட்டி ஃபண்டுகளிலும்
முதலீடு செய்வது
சிறந்தது.
நல்ல நிதி
ஆலோசகர்
நமக்கு கார்
ஓட்டத் தெரிந்தாலும்,
நாம் டிரைவரை
நியமித்து ஓட்டுவது
ரிஸ்க்கைக் குறைக்கும்;
அதுபோல, நம்
பணத்தை முதலீடு
செய்யும்போது நல்ல
நிதி ஆலோசகர்
மூலம் முதலீடு
செய்வது மேலும்
வளமையாக்கும்.
நன்றி நாணயம் விகடன்
S.Bharathidasan DECE, BA, FChFP.
Chartered Financial Practitioner
Chennai & Pondi
MOB; 94441 94869,
99528 74869
mailsbdpdy@gmail.com
Client login