சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com/
இன்றைய
சூழலில், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும்
ஏற்படலாம் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. முன்பெல்லாம் கடன்
வாங்க வேண்டிய சூழல் பலருக்கும் எப்போதாவதுதான் ஏற்படும். ஆனால், கோவிட் -
19 தொற்று நோய் தாக்கத்துக்குப் பிறகு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய
கட்டாயம் பலருக்கும் ஏற்படுகிறது. வேலை இழப்பு, வருமானம் குறைந்தது,
மருத்துவச் செலவுகள் அதிகரித்திருப்பது எனப் பல காரணங்களால் இந்தச் செலவு
அதிகரித்திருக்கிறது. இதன் விளைவு, அவசரகால நிதி (Emergency Fund) என்பது
அனைவருக்கும் மிகவும் அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
அவசரகால நிதி ஏன் அவசியம் தேவை?
எதிர்பாராத
திடீர் செலவுகள் ஒருவரைக் கடன் சுமையில் தள்ளாமல் இருக்கவும், நீண்ட நாள்
சேமிப்பு (வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம்) மற்றும் முதலீடு (மியூச்சுவல்
ஃபண்ட், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்) கரையாமல் இருக்கவும், வேலை இழப்பு
ஏற்பட்டால், அடுத்த நல்ல வேலையில் சேரும் வரை குடும்பச் செலவுகளைச்
சமாளிக்கவும் அவசரக் கால நிதியைச் சேர்த்து வைப்பது அவசியமாகும்.
திடீர்
விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பின் போது ஏற்படும் மருத்துவச்
செலவுக்குக் காப்பீடு கைகொடுக்கும். இருந்தாலும் அதை நம்பி 100% இருக்க
முடியாது. காரணம், மருத்துவக் காப்பீட்டில் அனைத்து நோய் களுக்கும்,
அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்காது. வழக்கமான மருத்துவ
பாலிசிகளில் சில நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு இழப்பீடு
கிடைக்காது. இதுபோன்ற நேரங்களில் அவசரகால நிதி இருந்தால்தான் நிலைமையை
எளிதாகச் சந்திக்க முடியும்.
No comments:
Post a Comment