மியூச்சுவல் ஃபண்ட், தேசிய ஓய்வூதியத் திட்டம், எது சிறந்தது?
தங்கத்தம்பி, எடப்பாடி
சி.பாரதிதாசன்,
நிதி ஆலோசகர், சென்னை / புதுச்சேரி
``இந்த
வித்தியாசத்தை விளக்க
நான்
எளிய
உதாரணம் தருகிறேன். மியூச்சுவல் ஃபண்ட்
திட்டத்தில் மாதாமாதம் 15,000 ரூபாயை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்த
முதலீடு 15,000*12*15 ஆண்டுகள் = ரூ.27
லட்சம்
ஆகும்.
இந்தத்
தொகைக்கு 15% வருமானம் கிடைக்கும் எனக்கொண்டால் ரூ.1
கோடி
கிடைக்கும்.
முதலீட்டுத்தொகை ரூ.27 லட்சம், வரிக் கழிவுத் தொகை 1 லட்சம் போக ரூ.72 லட்சத்துக்கு தற்போதைய வரிமுறைப்படி 10% எனக் கணக்கிட்டால், ரூ.7.2 லட்சம் வருகிறது. இதைக் கழித்ததுபோக நமக்கு ரூ.92.8 லட்சம் கிடைக்கும். தொடர்ச்சியாக வருமானத்தை வேறு ஃபண்டுகளுக்கு மாற்றம் செய்வதன்மூலம் நீண்டகால ஆதாய வரியைக் குறைக்கலாம்.
ஆனால், ரூ.27 லட்சத்தை என்.பி.எஸ் என
அழைக்கப்படும் தேசிய
ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து,
அதற்கு
வருமானம் 10% எனக்
கணக்கிட்டால், ரூ.62
லட்சம்
கிடைக்கும். இந்த
ரூ.62
லட்சத்தில் 60% தொகையானது வரி
இல்லாமல் பணி
ஓய்வின் போது
திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகை
பென்ஷன் திட்டத்துக்குப் போகும்.
தற்போதைய நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்சம் 12% வருமானம் கிடைத்தால்கூட, என்.பி.எஸ் முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட சற்றுக் கூடுதலாகவே இருக்கும். என்றாலும், பென்ஷன் வருமானத்தைப் பெற
விரும்புபவர்கள் என்.பி.எஸ் முதலீட்டைப் பரிசீலிக்கலாம்.’’
S.Bharathidasan DECE, BA, FChFP.
Chartered Financial Practitioner
Chennai & Pondi
MOB; 94441 94869,
99528 74869
mailsbdpdy@gmail.com
No comments:
Post a Comment