எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
வயது 45. கடந்த ஆறு மாத காலமாக வேலையில்லாமல் இருக்கிறேன். என் சேமிப்பு மூலமாகக் குறிப்பிட்ட அளவுக்கு வருமானம் கிடைக்கும்பட்சத்தில், வேலை கிடைக்கும் வரையிலான காலகட்டத்தை எளிதில் கடக்க இயலும். என் சேமிப்பில் ரூ.20 லட்சம் இருக்கிறது. இதை முதலீடு செய்து மாதாந்தர வருமானம் பெற ஆலோசனை கூறுங்கள். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டால் பயனுடையதாக இருக்கும்.
கிறிஸ்டோபர்,
முகநூல் வழியாக...
சி.பாரதிதாசன்,
நிதி ஆலோசகர், புதுச்சேரி / சென்னை
“நீங்களும் உங்கள்
மனைவியும் தலா
ரூ.4.5
லட்சத்தை ‘அஞ்சலக
மாதாந்தர வருவாய்’ (MIS) திட்டத்தில் முதலீடு செய்தால், 7.6% வட்டி என்ற
நிலையில் மாதந்தோறும் ரூ.5,700
கிடைக்கும். மீதமிருக்கும் தொகையில் ரூ.5
லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி
பேலன்ஸ்டு அட்வான்டேஜ் டிவிடெண்ட் ஃபண்டில் முதலீடு செய்தால், தோராயமாக மாதம்
ரூ.5,000
எதிர்பார்க்கலாம்.
மீதம் ரூ.6 லட்சம்
உள்ளது.
இதை
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் அஸெட்
அலொகேஷன் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளவும். அதிலிருந்து எஸ்.டபுள்யூ.பி முறையில் மாதம்
ரூ.5,000
வரை
வருமானம் பெறலாம். மொத்தமாக, ரூ.15,700
மாத
வருமானமாகப் பெற
வாய்ப்பிருக்கிறது.”
Thanks Naanayam Vikatan
S.Bharathidasan DECE, BA, FChFP.
Chartered Financial Practitioner
Chennai & Pondi
MOB; 94441 94869,
99528 74869
mailsbdpdy@gmail.com
Client login
No comments:
Post a Comment