எனக்கு 24 வயதாகிறது. என் ஓய்வுக்காலத் தேவைகளுக்காக மாதம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். எனக்கேற்ற திட்டங்களைக் கூறவும்.
விவேக், கோவை.
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.
”இளம் வயதில் உங்கள் ஓய்வுக் காலத்துக்காக சேமிக்க ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான முடிவு. டைவர்சிஃபைட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதன் மூலமாக உங்களின் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும்.
பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபோகஸ் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
மேலும், 12% வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டில் மாதம் ரூ.1,000 என 34 வருடத்துக்கு முதலீடு செய்யும்போது உங்களின் 58-வது வயதில் 57 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதன்மூலமாக மாதம் சுமார் ரூ.30 ஆயிரத்துக்குமேல் வருமானம் கிடைக்கும்.”
நன்றி விகடன்
S.Bharathidasan DECE, BA, FChFP.
Chartered Financial Practitioner
Chennai & Pondi
MOB; 94441 94869,
99528 74869
No comments:
Post a Comment